ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், வணிகர் சங்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, தமிழ்நாட்டில் ஆறு வாக்குகளில் ஒருவரின் வாக்கு, வணிகரின் வாக்கு என்பதால் தாங்கள் முடிவு செய்பவர்கள்தான் ஆட்சியில் இருக்க முடியும் என்று கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், உணவு பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள விதிகளின்படி நடவடிக்கை எடுத்தால் இந்தியாவில் ஒரு கடை கூட நடத்த முடியாது என்றும் கூறினார்.