``அதிகப்பிரசங்கித்தனம்''.. வேல்முருகனை எச்சரித்த சபாநாயகர் -சட்டமன்றத்தில் நடந்தது என்ன?
எம்எல்ஏ வேல்முருகன் பேரவையில் அதிகபிரசங்கித்தனமாக சில நேரங்களில் நடந்து கொள்கிறார் என கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் சபாநாயகரிடம் வலியுறுத்தினார். அப்போது சபாநாயகர் இந்த முறை எம்எல்ஏ வேல்முருகனை தாம் மன்னிப்பதாகவும், இனி இவ்வாறு நடக்கக்கூடாது என்றும் எச்சரித்தார்.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வேலைவாய்ப்பு தொடர்பாக வேல்முருகன் பேரவையில் பேசியதும் அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.