காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உயிரிழந்த தவெக நெல்லை வடக்கு மாவட்ட செயலாளர் சஜி உடலுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த ஆனந்த், தமிழக வெற்றிக் கழகம், சஜி குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.