Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.08.2023)

Update: 2023-08-17 08:02 GMT

ராமநாதபுரம் சென்ற முதல்வர் - வழிநெடுகிலும் வரவேற்பு

2 நாட்கள் சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றார், முதல்வர் ஸ்டாலின் .....

வழிநெடுகிலும் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.....செங்கல்பட்டு அருகே லோகோ பைலட்டை தாக்கி, ரயிலை இயக்க முயன்ற நபரால் பரபரப்பு....

ரயிலை விட்டு இறங்க மறுத்தவரை கைது செய்தது, ரயில்வே காவல்துறை....

ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகரை பிடிக்க,

தமிழக காவல்துறை தீவிரம்....

துபாய் நாட்டுடன் பரஸ்பர சட்ட ஒப்பந்ததை பயன்படுத்தி நடவடிக்கை....

விழுப்புரம் மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலில் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்.....

பட்டியலின மக்கள் 10 பேரிடம் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை....

ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு...

இமயமலைக்கு ஆன்மிக பயணம் சென்றுள்ள நிலையில், சந்திப்பு.....

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக மகளிர் அணி......

மாவட்டத்துக்கு 25 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க அறிவுறுத்தல்....

டிசம்பரில் தேசிய தலைவர்களை அழைத்து பிரம்மாண்ட கருத்தரங்கு நடத்தவும் திட்டம்....

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.....

நாளை முதல் 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு....

அமைச்சரின் காலில் குழந்தையை போட்டு கோரிக்கை விடுத்த ஓட்டுனருக்கு பணியிட மாறுதல்....

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், கோவையில் இருந்து தேனிக்கு பணியிட மாற்றம்.....

சென்னை ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்...

மாநகராட்சி அலுவலகத்திற்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு....

சிவசங்கர் பாபா மீது இமெயிலில் பாலியல் புகார் அளித்த மாணவியை காணொலி மூலம் ஆஜர்படுத்த வேண்டும்......

சிபிசிஐடி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.....

Tags:    

மேலும் செய்திகள்