Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14.08.2023) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2023-08-14 08:01 GMT

சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தை சேர்ந்த 21 காவலர்களுக்கு குடியரசு தலைவரின் வீர தீர செயல்களுக்கான விருது...

நாடு முழுவதும் 954 போலீசாருக்கு விருதுகள் வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு...

சுதந்திர தினத்தையொட்டி முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் பெறுவோரின் பட்டியல் அறிவிப்பு...

அஸ்ரா கர்க் உள்ளிட்ட 15 காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள்...

சுதந்திர தினவிழாவையொட்டி கூடலுரில் உள்ள 3 மாநில எல்லை சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனை...சுற்றுலா பயணிகள் போர்வையில் நாச வேலைக்கு முயற்சி செய்பவர்களை தடுக்க நடவடிக்கை...

சென்னையில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்த மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தையும் தற்கொலை...

நேற்று மாணவன் உயிரிழந்த நிலையில், இன்று அதிகாலையில் அவரது தந்தை செல்வம் தூக்கில் தொங்கினார்....

நீட் தேர்வை நீக்க சட்ட ரீதியான முயற்சியில் தமிழக அரசு தீவிரம்..

இன்னும் சில மாதங்களில் அரசியல் மாற்றம் நடக்கும் போது, நீட் தடுப்பு சுவர் உதிர்ந்து விழும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...

நீட் விலக்கு மசோதாவுக்கு கையெழுத்து போட மாட்டேன் என சொல்வது ஆளுநரின் அறியாமை எனவும் காட்டம்...

எந்த சூழலிலும் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை மாணவர்கள் எடுக்க வேண்டாம்..

சென்னையில் நீட் தேர்வு தோல்வியால் மாணவர் மற்றும் அவரது தந்தை தற்கொலை செய்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை...

நீட் விவகாரத்தில் ஆளுநர் ரவியின் பிடிவாத குணம் இனியாவது மாறுமா...?

சென்னையில் தற்கொலை செய்த மாணவனின் தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், விசிக தலைவர் திருமாவளவன் கருத்து...

இல்லாத அதிகாரத்தை, செயல்படுத்த மாட்டேன் என ஆளுநர் கூறுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்...

Tags:    

மேலும் செய்திகள்