பழனி முருகன் கோவிலில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம் | VCK

Update: 2024-11-21 15:16 GMT

கட்சி நிகழ்ச்சிக்காக திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு விசிக தலைவர் திருமாவளவன் வந்தார். அப்போது பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் மலையடி வாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்திற்கு சென்று தொட்டிச்சி அம்மன் மற்றும் புலிப்பாணி ஜீவசமாதியில் தரிசனம் செய்தார். அவருக்கு சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் வரவேற்பு வழங்கினார். கோயிலை விட்டு வெளியே வந்த அவரை கோயில் சுற்றுவட்டாரத்தில் உள்ள சாலையோர வியாபாரிகள் சூழ்ந்துகொண்டனர். தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். அவர்களின் குறைகளை கேட்டறிந்த திருமாவளவன், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்