வெள்ளத்தில் எமனுடன் சண்டையிட்ட பெண் நோயாளி... அண்ணாமலை செய்த செயலால் நடந்த அதிசயம்
தூத்துக்குடி மாவட்டம் சோனகன் விளை பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி முத்து. இவர் தனது மனைவி மகேஸ்வரியை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து சொந்த ஊர் அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காமல் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் பிளாஸ்டிக் பேரல்கள் மூலம் மிதவை போன்று அமைத்து, தன்னார்வலர்கள் உதவியோடு மனைவியை மருத்துவமனை வளாகத்திற்கு கொண்டு வந்தார். யாரும் உதவ முன்வரவில்லை என தன்னார்வலர்கள் குற்றம்சாட்டிய நிலையில், அவ்வழியே வாகனத்தில் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொண்டர்கள் மூலம் அவர்களை சொந்த ஊர் அனுப்ப உதவி செய்தார்.