அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் `தேர்தல் தகராறு வழக்கு' - சென்னை ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு
அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது சிவகங்கை பட்டமங்கலத்தில் திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக, திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளரான பெரிய கருப்பன் உள்ளிட்ட 8 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகங்கை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர் .
இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
சம்பவம் நடந்த சமயத்தில் அந்த இடத்தில் அமைச்சர் இல்லை என்று வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.