எம்.எல்.ஏ.வை நோக்கி சீறிய சபாநாயகர் அப்பாவு - பேரவையில் திடீர் பரபரப்பு

Update: 2025-03-19 13:29 GMT

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற அவை நிகழ்ச்சியின் கேள்வி பதில் நேரத்தின் போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன் நீண்ட நேரமாக தனக்கு துணை கேள்வி கேட்க வாய்ப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டே இருந்தார். தொடர்ந்து, எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் தன் இருக்கையில் அமர்ந்தபடியே சபாநாயகரை நோக்கி வாய்ப்பு வழங்கவில்லை என ஆவேசமாக கத்தியதால், கோபமடைந்த சபாநாயகர் அப்பாவு அம்மன் அர்ஜுனன் இதுபோல மிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவறு எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்