சிறை தண்டனை... பொன்முடி எடுத்த அதிரடி மூவ்... "ஜன 29.," நாள் குறித்த சுப்ரீம் கோர்ட்

Update: 2024-01-26 13:14 GMT

சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வருகிற 29ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், அவரது மனைவி விசாலாட்சியை விடுவித்து, 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். தண்டனையை உடனடியாக நிறுத்தி வைப்பதோடு, அதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உச்சநீதிமன்றம், சிறையில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டது. இதனிடையே, வருகிற 29ஆம் தேதி பொன்முடியின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்