உச்சநீதிமன்ற தீர்ப்பு... அமைச்சர் பளிச் பதில் | Sekar babu | Supreme Court

Update: 2024-12-27 09:16 GMT

உச்சநீதிமன்ற தீர்ப்பு... அமைச்சர் பளிச் பதில் | Sekar babu | Supreme Court

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்திற்கு எதிரான வழக்கில் தமிழக அரசுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருச்சி சமயபுரம் கோயிலில் காணிக்கையாக பெறப்பட்ட பயன்படுத்த முடியாத தங்கத்தை மும்பைக்கு அனுப்பும் பணி நடைபெற்றது. இந்த தங்கம் உருக்கப்பட்டு ஸ்டேட் பேங்கில் முதலீடு செய்யப்படும். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, உச்சநீதிமன்றத்தில் நமது தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை தொடர்வோம் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்