பரபரப்பான அரசியல் சூழலில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. நடப்பு ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் உரை நிகழ்த்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, சபாநாயகர் அப்பாவு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். சரியாக இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார். ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த பிறகு, இன்றைய கூட்டம் நிறைவடையும். அதனைத் தொடர்ந்து, சபாநாயகர் அறையில், அவரது தலைமையில் சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து முடிவு செய்வதற்காக, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். கடந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் உரை நிகழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது உரையில் மத்திய அரசின் நடவடிக்கைகளை குற்றம்சாட்டியும், மாநில அரசின் நடவடிக்கைகளை பாராட்டியும் இடம்பெற்ற கருத்துக்களை படிக்காமல் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இம்முறை தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் அப்படியே வாசிப்பாரா? அல்லது உரையை புறக்கணித்து வெளியேறுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.