அமைச்சர் பொன்முடிக்கு அன்று நடந்த சம்பவம் - தீர்ப்பு குறித்து ஐகோர்ட் எடுத்த முடிவு

Update: 2025-03-17 12:23 GMT

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியதாக கைது செய்யப்பட்டவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில், கடந்த ஆண்டு டிசம்பரில், பெஞ்சல் புயலால் பாதித்த மக்களை அமைச்சர் பொன்முடி சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கியபோது, அமைச்சர் மற்றும் அதிகாரிகளை ஆபாசமாக திட்டி, சேற்றை வாரி வீசி மிரட்டல் விடுத்த இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், ராமகிருஷ்ணனின் ஜாமின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்