"நேற்று கொந்தளித்த அம்மன் அர்ஜுனனுக்கு இன்று குளுமையான பதில்" - அமைச்சர் சேகர்பாபு

Update: 2025-03-20 11:52 GMT

சட்டப்பேரவையில் நேற்று கோபமாக இருந்த அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனனுக்கு குளுமையான பதில் தருகிறேன்னு அமைச்சர் சேகர்பாபு கூறியது அவையில் கவனம் பெற்றது. கேள்வி நேரத்தின் போது, கோவை வடக்கு தொகுதியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படுமா என அம்மன் அர்ஜுனன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, எதிர்காலத்தில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டதுடன், நேற்று கோபமாக இருந்த அம்மன் அர்ஜுனனுக்கு இன்று குளுமையான பதிலை தருகிறேன்னு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்