நாடு முழுவதும் கடந்த ஆண்டில் ஆயிரத்து 97 ஆன்லைன் சூதாட்ட தளங்கள் தடை செய்யப்பட்டிருப்பதாக, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இதுபோன்ற சம்பவங்கள் அரசாங்கத்தின் கவனத்திற்கு வரும்போதெல்லாம், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.