இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? - குடியரசு தலைவர் Game ஆரம்பம்.. நாடே திக்..திக்.. பதற்றத்தில்
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெறாததால் ஆட்சியமைப்பதற்கு தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை 11:30க்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், ஆட்சியமைக்க உரிமை கோருவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, புதிய மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை தயாராகி வருவதால், ஜூன் 5 முதல் 9ம் தேதி வரை பொது மக்கள் பார்வைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.