அரசியல் களத்தை அதிர்ச்சியாக்கிய ஈபிஎஸ் எடுத்த எதிர்பாரா முடிவு..

Update: 2024-06-16 03:00 GMT

அரசியல் களத்தை அதிர்ச்சியாக்கிய ஈபிஎஸ் எடுத்த எதிர்பாரா முடிவு..இந்த மீட்டிங் வீடியோ சொல்லும் சேதி..?

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலைக் கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற, அச்சப்படுகின்ற இயக்கம் அ.தி.மு.க. அல்ல என்பதை அனைவரும் நன்கு அறிவர் என தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி சுதந்திரமாக நடைபெறுமா? என்ற சந்தேகமும், கேள்வியும் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்களும், தி.மு.க.வினரும் ஆட்சி, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, பண பலம், படை பலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவார்கள் என்பதாலும், மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2026, சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.வின், மக்கள் ஆட்சி மீண்டும் மலர்வது உறுதி என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்