முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, கடந்த மூன்று ஆண்டுகளில் 1.69 லட்சம் புதிய வேளாண் மின் இணைப்புகளைக் கொடுத்து, சரித்திரம் படைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிக்கையில், இதற்காக மின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் உழவர்களுக்கு வழங்கப்பட்ட வேளாண் மின் இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 1.38 லட்சம் மட்டுமே என்று கூறியுள்ளார். ஆனால், திராவிட மாடல் ஆட்சியில், மூன்றே ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையைக் கடந்து 1.69 லட்சம் புதிய மின் இணைப்புகளை வழங்கி சாதனை புரிந்துள்ளதாக கூறியுள்ளார். இதனால், 3.38 லட்சம் ஏக்கர் வேளாண் நிலங்கள் பாசன வசதியைப் பெற்றிருப்பதாக தெரிவித்தார்.