ஒரு காட்டு காட்டிய மழை.. நேரில் சென்று உறுதி கொடுத்த அமைச்சர் - நிம்மதியில் மக்கள்

Update: 2024-11-28 08:32 GMT

நாகை மாவட்டம் நரியங்குடியில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்தார். அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் வழங்கினார். அப்போது, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடு கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ், மழைப்பொழிவு குறைந்ததும் வீடு கட்ட துரித நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்