தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வியில் பல அதிரடி மாற்றங்கள்... மொத்தமாக மாற்றி அதிரடி காட்டிய முதல்வர்

Update: 2024-08-22 04:15 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சி தந்த நிலையில் முதலமைச்சரிடம் இருந்து அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு வந்திருக்கிறது.. என்ன என்பதை பார்க்கலாம் இந்த தொகுப்பில்... அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்த முதல்வர்..

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிய மாவட்ட கல்வி அதிகாரி தடாலடி மாற்றம்... எதற்காக இந்த உத்தரவு...?

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பதில் உள்ள கிங்ஸ்லி பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில் கலந்து கொண்ட 12 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

தொடர்ந்து பள்ளியில் நடத்தப்பட்டது போலி என்சிசி முகாம் என்றும் பயிற்சி அளித்த சிவராமனும் போலி என்சிசி மாஸ்டர் என தெரிய வந்ததால் சிவராமனில் ஆரம்பித்த கைது நடவடிக்கை சம்பந்தப்பட்ட பள்ளியின் தாளாளர் உட்பட 11 பேர் வரை நீண்டது..

இதனிடையே மாவட்ட கல்வி அதிகாரிகள் சரியாக கண்காணித்து இருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை என பெற்றோர்கள் கூறி வந்த நிலையில் அதிரடியில் இறங்கியது கல்வித்துறை...

அதிரடியாக மாற்றப்பட்ட மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஒவ்வொரு மாவட்ட அதிகாரியும் மாதத்தில் 20 பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அத்தோடு இல்லாமல் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தனியார் பள்ளிக்கான மாவட்ட கல்வி அதிகாரி ரமாவதியை அந்த பொறுப்பில் இருந்து நீக்கியது. அத்துடன் சேர்த்து 57 மாவட்ட கல்வி அதிகாரிகளையும் அதிரடியாக மாற்றியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த விவகாரம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதிரடியாக அதிகாரிகளுக்கு பல உத்தரவுகளை பிறப்பித்தார்.

விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பெண் ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

மேலும் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பெற்றோர் உள்ளிட்ட பலரிடம் ஆலோசனை நடத்தி அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் பல்வேறு அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.

60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு இந்த குழு முழு விசாரணை மற்றும் ஆலோசனைகளை நடத்தி 15 நாட்களுக்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

இந்த வழக்கு சம்பந்தமான அனைத்து விசாரணைகளையும் முடித்து இரண்டு மாதத்திற்குள் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யவும் முதல்வர் காவல்துறைக்கு உத்தரவிட்டு இருக்கிறார். கிருஷ்ணகிரி விவகாரம் வேகமெடுத்திருக்கும் நிலையில் இனி இதுபோன்ற சம்பவம் வேறு எங்கும் நடந்திடக் கூடாது என்பதே அனைவரின் விருப்பமும்...

Tags:    

மேலும் செய்திகள்