இன்று நாடே உற்றுநோகும் வயநாடு தேர்தல் ரிசல்ட் - ராகுல் வெற்றியை உறுதி செய்வாரா பிரியங்கா?

Update: 2024-11-23 03:50 GMT

கேரளாவில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட்ட வயநாடு மக்களவைத் தொகுதி உள்பட 3 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, வயநாடு தொகுதியிலும், ரே பரேலி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல், செலக்கரா தொகுதி எம்எல்ஏவாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராதா கிருஷ்ணனும், பாலக்காடு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஷாபி பரம்பிலும் மக்களை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யானதால், அவர்களின் 2 தொகுதிகளும் காலியாகின. இந்நிலையில், வயநாடு மற்றும் செலக்கரா தொகுதிகளுக்கு கடந்த 13-ந்தேதியும், பாலக்காடு சட்ட மன்ற தொகுதிக்கு கடந்த 20-ஆம் தேதியும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த 3 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகேரி, பா.ஜ.க. சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 16 பேர் போட்டி யிட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். தற்போது நடைபெற்று முடிந்துள்ள இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி, அது போன்ற வெற்றியை பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்