வடசென்னை வளர்ச்சிக்காக இரண்டாம் கட்டமாக ஆயிரத்து 383 கோடி மதிப்பில் 79 திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார் என அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகம் மேற்கு பகுதி நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர், அதிமுக ஆட்சியில் மழை தண்ணீர் வந்தால் 10, 15 நாட்கள் கழித்து தான் வடியும் என்றும் மறுநாளே வடிந்தது திமுக ஆட்சியில் தான் என்றும் கூறினார். மேலும், இந்தியாவில் பசி இல்லாத மாநிலம் ஒன்று தமிழ்நாடு & மற்றொன்று கேரளா என்று குறிப்பிட்ட அவர், நமது முதலமைச்சர் கொடுத்த ஆயிரம் ரூபாய் இல்லாவிட்டால் பல குடும்பங்கள் பட்டினியாக இருந்திருக்கும் என்றும் கூறினார்.