ரேஷன் கடை திறப்பதில் போட்டி.. - பயன்பாட்டில் உள்ள கடையை மீண்டும் ரிப்பன் வெட்டி திறந்ததால் சர்ச்சை

Update: 2024-12-04 15:33 GMT
  • சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை திறப்பதில் அ.தி.மு.க - தி.மு.க இடையே போட்டாபோட்டி நிலவியது. கடந்த நவம்பர் 29ஆம் தேதி கெங்கவல்லி தொகுதி அதிமுக எம்எல்ஏ நல்லதம்பி, ரிப்பன் வெட்டி ரேஷன் கடையை திறந்து வைத்தார். தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள அதே ரேஷன் கடையை, மீண்டும் ரிப்பன்வெட்டி தி.மு.க நிர்வாகி சண்முகம் திறந்து வைத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்