"தமிழக அரசின் பட்ஜெட் காப்பி அடிக்கப்பட்ட பட்ஜெட்" - தமிழிசை சௌந்தரராஜன் கருத்து

Update: 2025-03-16 02:39 GMT

தமிழக அரசின் பட்ஜெட், காப்பி அடிக்கப்பட்ட பட்ஜெட் என்று, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். திருவேற்காட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பெண்களுக்கான விடுதி முதல் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பல திட்டங்கள், மத்திய அரசின் திட்டங்கள் என்று கூறினார். மொத்தத்தில் இது வெற்று பட்ஜெட் என்றும், சிறுபான்மையினர் மட்டுமன்றி, பெரும்பான்மையினருக்கும் எந்த அறிவிப்பும் கொடுக்காத பட்ஜெட் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்