"குமரியில் ஐடி பார்க், புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தேவை" - எம்.எல்.ஏ ராஜேஷ்குமார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா, புற்றுநோய் ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவை அமைத்து தர வேண்டும் என கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவையில், நகராட்சி நிர்வாகத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அவர், நெய்யாறு இடதுகரை கால்வாய் மற்றும் ஏ.வி.எம் கால்வாயை தூர்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மேலும், மீனவர்கள் குடியிருப்பு மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு கட்டிட அனுமதி வழங்க வேண்டும் என ராஜேஷ்குமார் வலியுறுத்தினார். மீனவ கிராமங்களை இணைக்கும் வகையில் கடற்கரை சாலைகளை மேம்படுத்திதர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.