1"அம்பேத்கரை சீண்டிய பாஜகவின் கேடுகாலம் தொடங்கிவிட்டது" - திருமா காட்டம்
அம்பேத்கரை சீண்டிய பாஜகவின் கேடுகாலம் தொடங்கிவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அம்பேத்கர் பெயரை ஆயிரம் முறை உச்சரிக்கும் ஆர்ப்பாட்டம் விசிக சார்பில் நடத்தப்பட்டது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் தொண்டர்கள் அம்பேத்கர் முகமூடி அணிந்தபடி கலந்துகொண்டனர். அம்பேத்கர் பெயரை உச்சரித்து அமித்ஷாவிற்கு கண்டனம் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், அரசியலமைப்புச் சட்டம் குறித்து மத்திய அமைச்சர்களுக்கு தேர்வு வைத்தால், தேர்ச்சி பெறுவார்களா என கேள்வி எழுப்பினார்.