விஸ்வரூபம் எடுக்கும் அண்ணா பல்கலை. விவகாரம்- அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு அண்ணாமலை பரபரப்பு கேள்வி

Update: 2024-12-29 02:04 GMT

அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் தாக்குதல் செய்த குற்றவாளியான ஞானசேகரன் குறித்து, அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மா.சுப்பிரமணியனுடன் ஞானசேகரன் அண்மையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, பெஞ்சல் புயல் பணிகளின்போது, அமைச்சருடன் செல்லும் அளவுக்கு நெருக்கமாக இருக்கும் ஞானசேகரன் குறித்து, அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஏன் இன்னும் விளக்கமளிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார். குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதை மறைக்க, இன்னும் எத்தனை நாட்களுக்குப் பொய் சொல்லி ஏமாற்றலாம் என்று நினைக்கிறது திமுக அரசு? என்றும் திமுகவினருக்காக மட்டுமே இந்த ஆட்சி நடக்கிறதா? என்றும், நமது சகோதரிக்கான நியாயத்தை விட, திமுகவை சேர்ந்த குற்றவாளி, முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியமாகி விட்டாரா? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்