"கப்சிப்" ஆன அண்ணாமலை.. இந்த பேச்சே அதற்கு சாட்சி.. ஒரு வார்த்தை கூட வரலயே..!
பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்துள்ள நிலையில், ஒரு வார்த்தைகூட அதிமுக பற்றி பேசாமல் திமுகவை மட்டும் விமர்சித்தார். கோவை கணபதி பகுதியில் தொடங்கிய, என் மண் எம் மக்கள் யாத்திரை, இடையர்பாளையத்தில் நிறைவடைந்தது. அங்கு தொண்டர்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை, திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம், மின்வெட்டால் கோவையின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும், மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகவும் விமர்சித்தார். தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், 2 கிலோ மீட்டர் நடந்துசெல்வதற்கு மூன்றரை மணி நேரம் ஆவதாக தெரிவித்த அண்ணாமலை, அந்த அளவுக்கு மக்களின் மனதில் பிரதமர் மோடி இடம் பிடித்துள்ளதாக கூறினார்.