ரயில்வேயில் லோக்கோ பைலட் பணிக்கு விண்ணப்பித்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தேர்வர்களை அலைக்கழிப்பது கண்டிக்கத்தக்கது என்றும், தேர்வர்களுக்கு இது மன உளைச்சலை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழக தேர்வர்களுக்கு அவர்களின் சொந்த ஊருக்கு அருகில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.