அதிமுக, பாஜக டோட்டல் வாஷ் அவுட் - மீண்டும் கண்முன் வந்த `அந்த' வருடம்

Update: 2024-06-05 02:59 GMT

2004 மக்களவை தேர்தலுக்கு பின், தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றி உள்ளது.தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் சமயங்களில் '40ம் நமதே நாடும் நமதே' என்ற கோஷத்துடன் 40க்கு 40 தொகுதிகளின் வெற்றியை நோக்கி அரசியல் கட்சிகள் செயல்படுவது வழக்கம்.தற்போதைய மக்களவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளையும் தி.மு.க. தலைவரான முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றி இருக்கிறது.இதற்கு முன், 2004ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றியது.அதற்கு முன்பாக, 1996ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக மற்றும் மூப்பனார் தலைமையிலான த.மா.கா. கட்சிகள் இணைந்த கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.இதே சாதனை வெற்றியை 1991ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்