27 நிமிடத்தில் 51 செய்திகள் | காலை தந்தி எக்ஸ்பிரஸ் | Speed News | Thanthi News (27.07.2023)

Update: 2023-07-27 03:49 GMT

சென்னையில் தக்காளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை நிலையங்களில் தக்காளி கிலோ 150 ரூபாய் முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தினமும் 1100 டன் தக்காளி தேவைப்படும் நிலையில் 400 டன் தக்காளியே வந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. இதே போல் பீன்ஸ் 90 ரூபாய்க்கும், இஞ்சி 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது..


தமிழக ஆளுநர் நமக்காக பிரசாரம் செய்வதால், தேர்தல்வரை இதே ஆளுநர் தொடர்வதே நல்லது என்றும், இதனால் திமுக கூட்டணிக்கு வாக்குகள் அதிகரிக்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். திருச்சியில் திமுக பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அனைவருக்கும் பொதுவான ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பதால், நம்மை நிராகரிப்பவர்கள் இருக்க மாட்டார்கள் என்று கூறினார். மேலும், திமுக ஆட்சியை எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்..


டாஸ்மாக் இல்லாத தமிழகத்தை அமைப்பது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வெள்ளை அறிக்கை அளித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், குடிப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை முதல்வர் கண்டும் காணாமல் மௌனப் பார்வையாளராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனால், தமிழக பாஜக தயாரித்துள்ள "டாஸ்மாக் இல்லாத தமிழகம்" என்கிற 372 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை ஆளுநரிடம் அளித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


ஆளுநரை சந்தித்த பின், செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மீரட்டில் செயல்படும் பாரமவுன்ட் பூச்சிக்கொல்லி நிறுவனத்தின் பெயரில் மோசடி நடைபெற்றுள்ளதாக கூறினார். எல்காட் நிறுவனத்தின் 95.4% பங்குகளை தனியாருக்கு விற்றதில் 3,000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அரசு பேருந்துகளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுவதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறிய அவர், தொழிலில் தொடர்பில்லாத 5 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்