60 ஆண்டுகள் கழித்து பள்ளி தோழனை சந்தித்த அமைச்சர் - புல்லரிக்க வைக்கும் காட்சி
கடலூர் மாவட்டம் மங்களூர் அடுத்துள்ள மலையனூரில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் கலந்து கொண்ட நிலையில் , அங்கு தனது ஐந்தாம் வகுப்பு பள்ளி தோழனான பெரியசாமி என்பவரை அறுபது ஆண்டுகள் கழித்து சந்தித்தார். அரசன்குடி கிராமத்தில் கட்சி தொண்டர் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்ற போது, இந்த சந்திப்பு நடந்துள்ளது. இருவரும் தங்கள் பழைய பள்ளி நினைவுகளை நினைவுகூர்ந்து பேசியதை பொதுமக்கள் ஆச்சரியமுடன் பார்த்து சென்றனர்.