200 யானைகளை கொன்று, இறைச்சிகளை மக்களுக்கு வழங்க திட்டம் || Zimbabwe

Update: 2024-09-18 05:54 GMT

உணவுக்காக யானைகளை கொல்ல திட்டமிட்டிருக்கும் ஜிம்பாப்வே அரசு.. பின்னணி காரணம் மனதை உலுக்கி இருக்கும் நிலையில், பார்க்கலாம் விரிவாக...

வறட்சியின் உச்சத்திலும், பஞ்சத்தின் கோரப்பிடியிலும் சிக்கி தத்தளித்து வருகிறது ஜிம்பாப்வே...

வரலாறு காணாத வறட்சியின் காரணமாக, ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில்... மக்களும், குழந்தைகளும் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர்..

இந்நிலையில்தான், பஞ்சத்தை ஈடுகட்டவும், உணவு பற்றாக்குறையில் இருந்து மக்களை காக்கவும் ஜிம்பாப்வே அரசு விநோத நடவடிக்கை ஒன்றை கையிலெடுத்துள்ளது...

சுமார் 200 யானைகளை கொன்று அதன் இறைச்சிகளை மக்களுக்கு உணவாக வழங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டிருக்கிறது...

கடும் வறட்சியால் உணவின்றி தவிக்கும் மக்கள் - விநோத முடிவு

அதுவும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்களை தேர்ந்தெடுத்து முதற்கட்டமாக வழங்க இருக்கிறார்களாம்...

ஆனால், யானைகளை கொன்று அதன் இறைச்சிகளை மக்களுக்கு கொடுக்கும் இந்த முறையை நாங்கள் எப்படி கையாளப்போகிறோம் என, அந்நாட்டு அதிகாரிகள் விழி பிதுங்கி போயுள்ளனர்..

200 யானைகளை கொன்று, இறைச்சிகளை மக்களுக்கு வழங்க திட்டம்

இதனிடையே, 54 ஆயிரம் யானைகள் இருக்க வேண்டிய பூங்காவில், 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாகவும், வறட்சியை சமாளிக்க வேறு வழியில்லாமல் யானையை கொல்ல இருப்பதாக தெரிவித்திருக்கும் அதிகாரிகள், முதற்கட்டமாக நான்கு மாவட்டங்களில் உள்ள 200 யானைகளை கொல்ல இருப்பதாக தெரிவித்துள்ளனர்...

கடந்த 1988-இல் கடும் வறட்சியால் இதேபோல் யானைகள் வேட்டையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்