யூடியூப்-ஐ பார்த்து வயிற்றை கிழித்த இளைஞர்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்
உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் இளைஞர் ஒருவர் தனக்குத் தானே அறுவை சிகிச்சை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 14 வயதில் குடல்வால் அறுவை செய்து கொண்ட ராஜா பாபு என்பவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், யூடியூப் வீடியோக்களை பார்த்து, அறுவை சிகிச்சை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். வலியால் அவர் அலறி துடித்ததால் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.