இது என்ன டா புது `Game'-ஆ இருக்கு..ஒரே இடத்தில் ஒன்று கூடிய 1000பேர்..மாறி மாறி உடைந்த மண்டை
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேவர்கட் மலையில் கொண்டாடப் பட்டிருக்கிறது வினோத திருவிழா..
மலையின் உச்சியில் நிலை கொண்டிருக்கும் மல்லேஸ்வரர் சுவாமி கோயிலில் தேவர்கட் மலையை சுற்றியுள்ள 23 கிராம மக்களும் குழுமியிருக்கின்றனர் ..
ஆண்டுக்கு ஒரு முறை, விஜயதசமியன்று.. மல்லேஸ்வர் ஆலயத்தில் கல்யாண உற்சவ விழா நடைபெறும் என கூறப்படுகிறது..
உற்சவ விழாவில் கூடும் 23 கிராம மக்களும், அன்றிரவு தங்களுக்குள்ளாகவே இரு பிரிவுகளாக பிரிந்து, தடியடி நடத்தி மோதிக் கொள்வார்களாம்..
இந்த மோதல்.. கல்யாண உற்சவம் முடிவடைந்த பின்பு, உற்சவ மூர்த்திகளை யார் கைப்பற்றுவது என்பதற்காக நடத்தப்படுவதாம்..
கடைசியாக மோதலில் வெற்றி பெறும் குழுவை சேர்ந்தவர்களே, உற்சவ மூர்த்திகளை தங்களின் கிராமத்திற்கு எடுத்து செல்வார்கள் எனக் கூறப்படும் நிலையில், இந்த வருடம் நடைபெற்ற உற்சவ மூர்த்திக்கான மோதலில் கடும் உக்கிரத்துடன் மக்கள் மோதிக்கொண்டனர்..
இந்த பக்தி தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மோதிக் கொண்ட நிலையில், ஒவ்வொருவரும் எதிரணியினரின் மண்டையை தடியால் தாக்க, தேவர்கட் மலையே பரபரப்பானது...
பாரம்பரியமாக நடைபெறும் தாக்குதல் என்பதால், முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தனர்..
ஒரு தரப்பு போலீசார், மலையில் சிசிடிவிக்களை பொருத்தி அதனை கண்காணிக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டிருதனர்..
பக்தி மோகத்தில் மூழ்கி ஒவ்வொருவரும் வெறி கொண்டு தாக்குதல் நடத்திய நிலையில், சுமார் 100க்கும் மேற்பட்டோரின் மண்டை உடைந்து, ரத்தம் சொட்ட அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், பின்பு தலையில் கட்டுடன் அவர்கள் வெளியில் வந்ததும் அனைவரது விழிகளையும் பிதுங்க செய்தது..
இதனிடையே, வினோத வழிபாட்டை மலையில் இருந்த மரத்தின் மீதேறி அமர்ந்து பார்த்து கொண்டிருந்த இருவர், மரக்கிளையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது..
இந்த மாதிரியான வினோத வழிபாடு, நம்முடைய முன்னோர்களால் பழங்காலத்தில் வெவ்வேறான வழிபாட்டு முறைகளில் கடைபிடித்து வந்த நிலையில், நவ நாகரிக காலத்தின் மாறுபாடாக அவைகளில் பல மறைந்து போனதும் குறிப்பிடத்தக்கது..
இந்நிலையில், இந்த வழிபாட்டையும் கைவிடக்கோரி போலீசார் பல முறை வற்புறுத்தியதாகவும், சம்பந்தப்பட்ட 23 கிராம மக்களை அழைத்து கவுன்சிலிங் கொடுத்தாகவும் கூறப்படுகிறது..
ஆனாலும், சம்பிரதாயத்தையும், தங்களின் முன்னோர் வழிபாட்டையும், ஒரு போதும் கைவிடமாட்டோம் என கூறி மக்கள் தொடர்ந்து வந்த இந்த வழிபாட்டில் இருவர் உயிரிழந்தது ஆந்திராவையே பதற்றம் கொள்ள வைத்திருக்கிறது..