மண்டைக்குள் வெறி ஏற்றிய ஈகோ.. காணாமல் போன காரின் மேல்பாதி - தலையே இல்லாமல் முண்டமாக பறந்த உடல்கள்
மண்டைக்குள் வெறி ஏற்றிய ஈகோ.. காணாமல் போன காரின் மேல்பாதி - தலையே இல்லாமல் முண்டமாக பறந்த உடல்கள் - நாடு கண்டிராத கோரம்
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நள்ளிரவு ஒன்றரை மணிக்கு தலைக்கேறிய போதையில் காரில் புறப்பட்ட கும்பலுக்கு நேர்ந்திருக்கும் விபரீதம், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை பதறச் செய்திருக்கிறது...
பர்த் டே பார்ட்டியில் உச்சகட்ட போதையில் இருந்த ப்ரண்ட்ஸ் கேங்கால் நிகழ்ந்திருக்கும் இந்த விபத்து யாரும் இதுவரை பார்த்திராத கோரம்..
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அருகே உள்ள சௌக் பகுதியில் நள்ளிரவு ஒன்றரை மணிக்கு நடந்த கோரச் சம்பவம்தான் இது..
சாலையை கடந்த லாரியின் அடியில் மின்னல் வேகத்தில் கார் ஒன்று வந்து சொருகியதும்... காரில் மேல் பகுதி அப்படியே வழித்தெடுத்ததுபோல் வெளியேறியதில், இருவர் தலையின்றி சடலமாக தூக்கி வீசப்பட்டதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...
3 பெண்கள் உட்பட ஆறு பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்...
அனைவரும் 25 வயது கூட நிரம்பாதவர்கள்.. பின்னணி விசாரணையில், நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கூடிய 7 பேர் கொண்ட கும்பல், கொண்டாட்டத்தின் முடிவில் தலைக்கேறிய மதுபோதையில் காரில் ஏறி புறப்பட்டது தெரியவந்திருக்கிறது..
அப்போது, தங்களுக்கு முன்னால் பி.எம்.டபிள்யூ கார் ஒன்று முந்திச் சென்ற ஈகோவால், பதிலுக்கு காரை முந்தி சென்றிருக்கிறார்கள். சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கியதில் தான் இந்த விபத்து என்பதை போலீசார் கண்டுபிடித்திருக்கின்றனர்...
ஒருவர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்..
மதுபோதையில் காரை இயக்கிய கார் உரிமையாளர் உயிரிழந்து விட்ட நிலையில், அவர் விபத்துக்கான பொறுப்பை ஏற்க முடியாதெனவும், கண்டெய்னர் லாரி மீதும் தவறேதும் இல்லை எனவும் கூறப்படுகிறது..
இந்நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணையை போலீசார் முடுக்கி விட்டிருக்கும் சூழ்நிலையில், இதுபோன்ற மனதை பதைபதைக்க செய்யும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதும், உயிர்கள் பறிபோவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...