தன்னுடைய முதல் எதிரியான சீனாவுக்கு செக் வைக்கும் ட்ரம்ப் - இந்தியா வழியில் அமெரிக்கா?

Update: 2024-12-17 02:45 GMT

சீன செயலியான டிக் டாக்கை அமெரிக்காவில் தடை செய்வது குறித்து தமது நிர்வாகம் முடிவெடுக்கும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கான ஒப்புதலில், இந்த ஆண்டு, அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார். டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமாக சீனாவின் ByteDance நிறுவனம், டிக்டாக்கின் அமெரிக்க பங்குகளை விற்காவிட்டால், அதை தடை செய்ய அந்த சட்டம் வழிவகை செய்கிறது. இந்நிலையில், புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள தனது ரிசார்ட்டில் செய்தியாளர்களை சந்தித்த டொனால்ட் ட்ரம்ப், டிக் டாக்கை தடை செய்வது குறித்து, தமது நிர்வாகம் முடிவெடுக்கும் என்றார். மேலும், டிக் டாக்கிற்கு, தமது இதயத்தில் இதமான ஒரு இடம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்