உலகையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவு..குடும்பத்தை இழந்து தவித்த பெண்ணுக்கு கடைசியாக வந்த நிம்மதி செய்தி
உலகையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவு..குடும்பத்தை இழந்து தவித்த பெண்ணுக்கு கடைசியாக வந்த நிம்மதி செய்தி
#thanthitv #wayanad #wayanadlandslide
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேர் உயிரிழந்தனர். அந்த குடும்பத்தை சேர்ந்த சுருதி என்ற இளம்பெண் கொச்சியில் தங்கி தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்ததால் நிலச்சரிவில் சிக்காமல் தப்பித்தார். குடும்பத்தையே இழந்து சோகத்தில் ஆழ்ந்த சுருதிக்கு ஆறுதலாக அவரின் காதலர் ஜென்சன் இருந்தார். இந்நிலையில் சுருதியின் குடும்பத்தில் உயிரிழந்தவர்களுக்கான சடங்குக்காக, 40 நாட்களுக்கு பின் காதலர் ஜென்சன் மற்றும் உறவினர்களுடன் கல்பற்றா அருகே
கோவிலுக்கு சென்று திரும்பிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனால் துயரத்தின் உச்சசத்திற்கே சென்ற சுருதிக்கு அரசு வேலை வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன்
அறிவித்திருந்தார். காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, ஓய்விலிருந்த சுருதி நேற்று ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் முன்னிலையில் அரசு
பணியில் சேர்ந்துள்ளார். தனக்கு துயரம் ஏற்பட்ட போது ஆதரவு கரம் நீட்டி உறுதுணையாய் இருந்த அரசு மற்றும் அனைத்து தரப்பினருக்கும் சுருதி நன்றி தெரிவித்துள்ளார்.