உயிர் பயத்தை காட்டி சென்ற ஃபெஞ்சல் புயல் - புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு
ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் சுமார் 50 செ.மீ மழை பொழிந்தது. இதனால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் தத்தளித்தன. புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியங்களில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், கடுமையாக பாதிக்கப்பட்ட புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளை இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.