அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கு - சி.பி.ஐக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2024-12-07 02:28 GMT

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, முக்கிய தலைவர்கள் பயணிப்பதற்காக இந்திய விமானப்படைக்கு 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில், 12 ஹெலிகாப்டர்கள் வாங்க அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற இத்தாலி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் 423 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து 2014இல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய ஹெலிகாப்டர் பேரத்திற்கு இடைத்தரகராக செயல்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேலை, சிபிஐ 2018இல் கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள்

விக்ரம் நாத், பி.பி. வார்லே அடங்கிய அமர்வு விசாரித்து, மனுவுக்கு பதில் அளிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்