"உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்று நடந்ததோ வேறு..." - தமிழகத்துக்கு அதிர்ச்சி கொடுத்த ரிபோர்ட்

Update: 2024-05-05 06:13 GMT

"உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்று நடந்ததோ வேறு..." - தமிழகத்துக்கு அதிர்ச்சி கொடுத்த ரிபோர்ட்

தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நதி நீரில்,

46 சதவீத நீரை மட்டுமே கர்நாடகா அளித்துள்ளது.

அது பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பு

அலசுகிறது.

தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும்

நிலையில், காவிரி நீரின் அளவும் வெகுவாக சரிந்து

வருகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, 2023 ஜூன் ஒன்று

முதல் 2024 ஏப்ரல் 28 வரை, மொத்தம் 174.49 டி.எம்.சி

நீரை கர்நாடகா, தமிழகத்திற்கு அளிக்க வேண்டும்.

ஆனால் இந்த கால கட்டத்தில் 78.28 டி.எம்.சி நீரை

மட்டும் கர்நாடகா, தமிழகத்திற்கு அளித்துள்ளதாக

தரவுகள் கூறுகின்றன.

கர்நாடகாவில், காவிரிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள நான்கு

முக்கிய அணைகளில், 2023 ஜூன் ஒன்று முதல், 2024

ஏப்ரல் 25 வரை மொத்தம் 150.94 டி.எம்.சி நீர் காவிரி மூலம் பெறப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில், தமிழக எல்லைப் பகுதியில் உள்ள பில்லிகுண்டுவிற்கு காவிரி மூலம் கிடைக்கப்பட்ட நீரின் அளவு 78.69 டி.எம்.சியாக இருந்தது.

அந்த வகையில், கர்நாடகா மாநிலம், தமிழகத்திற்கு அளிக்கப்பட வேண்டிய காவிரி நீரின் அளவில்

54.86 சதவீதத்தை அளிக்காமல் பற்றாகுறை வைத்துள்ளது.

ஏப்ரல் 30 அன்று நடைபெற்ற காவிரி நதி நீர் மேலாண்மை

வாரியக் கூட்டத்தில், போதுமான நீர் இல்லாததால், தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை அளிக்க முடியாது என்று கர்நாடகா மறுத்து விட்டது.

காவிரி நதிநீர் வாரியமும், கர்நாடகாவின் நிலைபாட்டிற்கு

ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் எதுவும் செய்யவில்லை என்று துறைசார் நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 90 நீர் நிலைகளில்,

10 நீர் நிலைகள் முற்றிலும் வறண்டுள்ளதாக நீர் வளத் துறையின் தரவுகள் கூறுகின்றன.

மே 2 நிலவரப்படி, 90 நீர் நிலைகளில் மொத்தம் 51.99 டி.எம்.சி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. இது, இந்த நீர்நிலைகளின் மொத்த கொள்ளவில் 23.18 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீர்

பாற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்