கும்பமேளாவில் கலந்து கொள்ள விரும்பி 1974ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் எழுதிய கடிதம் தற்போது 4 கோடியே 32 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. லண்டனைச் சேர்ந்த Bonhams ஏல நிறுவனம் இந்தக் கடிதத்தை ஏலம் விட்டிருந்தது. ஸ்டீவ் ஜாப்ஸ் தனது 19வது பிறந்த நாளுக்கு முன்னதாக தனது நண்பருக்கு அக்கடிதத்தை எழுதியிருந்தார். தன் கணவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லாரன் பவல் ஜாப்ஸ், தற்போது மகா கும்பமேளாவுக்காக இந்தியாவில் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.