திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து | PM Modi | Thiruvalluvar Day | ThanthiTV
தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் தினத்தில் நம் மண்ணின் தலைசிறந்த தத்துவஞானிகள், கவிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களில் ஒருவரான திருவள்ளுவரை நினைவு கூர்வோம் எனத் தெரிவித்துள்ளார். அவரது திருக்குறள் தமிழ் கலாச்சாரத்தின் சாரத்தையும் நமது தத்துவ பாரம்பரியத்தையும் பிரதிபலிப்பதாக கூறியுள்ளார். அவரது போதனைகள் நீதி, நேர்மை, இரக்கம் ஆகியவற்றை வலியுறுத்துகின்றன என்று கூறியுள்ளார். நமது சமுதாயத்திற்கான அவரது தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவோம் என பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.