மின்னல் வேகத்தில் மோதி 2 பேரை தூக்கி வீசிய கார்.. வெளியான அதிர்ச்சி வீடியோ வைரல்
மகாராஷ்டிரா மாநிலம், நவிமும்பை பகுதியில் உள்ள தலோஜா பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 2 பேர் மீது அசுரவேகத்தில் வந்த கார் ஒன்று, மோதியதில், இருவருமே தூக்கி வீசப்பட்ட, பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரல் ஆகின்றன. இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் தீவிர சிகிச்சையில் உள்ளார்.