பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை அவரது வீட்டின் உள்ளே புகுந்து மர்மநபர் கத்தியால் குத்தியுள்ளார்
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ராவில் (மேற்கு) உள்ள அவரது மற்றும் மனைவி கரீனா கபூரின் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையன் அவரை கத்தியால் குத்தியதில் காயம் அடைந்தார். இன்று அதிகாலை 2:30 மணியளவில் நடிகர் தனது மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து பணிப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நடிகர் தலையிட முயன்றபோது, அவர் தாக்கப்பட்டார் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
தாக்கிய பின்னர் தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகவும், அவரைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்தியவரைப் பிடிக்க பல குழுக்களை அமைத்துள்ளனர்