சபரிமலையில் இருந்து திரும்பும் தமிழக பக்தர்கள் வசதிக்காக தமிழக பேருந்துகள் பம்பையில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை மண்டல ஜோதி, மகர ஜோதி பூஜையையொட்டி தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் வரும் 15 ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 16 ஆம் தேதி வரையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வழக்கமாக தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பேருந்துகள் நிலக்கல்லில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள பம்பையில் பக்தர்களை இறக்கிவிடும். ஆனால் திரும்பி வரும்போது நிலக்கல்லில் இருந்தே புறப்படும். இம்முறை சபரிமலையில் இருந்து திரும்பும் பக்தர்கள் வசதிக்காக தமிழக பேருந்துகள் பம்பையில் இருந்து இயக்கப்படும் எனவும் இதற்கு கேரள அரசிடம் அனுமதி பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மகர ஜோதி வரையில் 2 தமிழக பேருந்துகள் பம்பையில் நிறுத்தி வைக்கப்படும், அவைகளில் பக்தர்கள் நிலக்கலுக்கு அழைத்து வரப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.