தமிழக மண்ணில் நின்று உறுதியாக சொன்ன குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு | Droupadi Murmu

Update: 2024-11-28 11:43 GMT

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ராணுவ தளவாட ஏற்றுமதி 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். அங்கு பயிற்சி பெற்று வரும் இந்திய மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார். பின்பு தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், ராணுவ பயிற்சி கல்லூரியில் பெண் அதிகாரிகளும் பயிற்சி பெறுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இந்திய கடற்படையில் முதன்முறையாக ஒரு பெண் கமாண்டிங் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார். மேலும் இந்தியாவில் இருந்து ராணுவ தளவாடங்கள் நூற்றுக்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும், முன்பை விட 30 சதவீதம் ஏற்றுமதி அதிகரித்து இருப்பதற்கு மேக் இன் இந்தியா திட்டமே காரணம் என்றும் திரவுபதி முர்மு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்