#BREAKING || எஃப் ஐ ஆர் பதிவு..! கைதாகிறாரா ராகுல் காந்தி..? | Congress | FIR | Rahul Gandhi
நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது தொடர்பாக செய்தியார்களிடம் ராகுல் காந்தி பேசினார். அப்போது, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் அரசியல் சாசனம் மற்றும் அம்பேத்கருக்கு எதிரானது என ஆரம்பம் முதல் சொல்லி வருகிறோம், இப்போது தனது மனநிலையை உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைவரது முன்பாகவும் எடுத்துக்காட்டி விட்டார் என்றார். அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்திய ராகுல் காந்தி, இன்று நாடாளுமன்றத்தில் ஒரு திசைத்திருப்பும் முயற்சியை பாஜக அரங்கேற்றியதாக குற்றம் சாட்டினார்.
நாங்கள் நாடாளுமன்றம் சென்ற போது படியில் வரிசையாக அமர்ந்து இருந்த பாஜகவினர் உள்ள செல்ல அனுமதிக்கவில்லை, தடுப்பாக நின்றனர் என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். அதானி விவகாரம் குறித்து பேச அனுமதிக்காதவர்கள் தொடர்ந்து திசைத்திருப்பும் செயல்களில் ஈடுபடுகிறார்கள் எனவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.