புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இன்று மீண்டும் விமான சேவை தொடங்கி உள்ளது. கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் இன்று முதல் துவங்கியுள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வந்தடைந்த விமானத்தை தண்ணீர் பீய்ச்சி அடித்து விமான நிலைய ஊழியர்கள் வறவேற்றனர். மேலும் விமானத்தில் வந்த பயணிகளுக்கு பூங்கொத்து கொடுத்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வரவேற்றனர்