பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளடங்கிய பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு ரஷ்யாவின் காசனில் அக்டோபர் 22, 23ம் தேதிகளில் நடைபெறுகிறது. இவ்வாண்டு ரஷ்யா தலைமையில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற இருக்கும் வேளையில், ரஷ்ய அதிபர் புதின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ரஷ்யா செல்கிறார். உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல் என்ற கருப்பொருளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 3வது முறையாக பதவியேற்ற பிறகு ஜூலையில் ரஷ்யா சென்றார். இப்போது 2 மாத இடைவெளியில் மீண்டும் ரஷ்யா பயணம் செல்ல உள்ளார்.